தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

கஞ்சா போதையில் 6 மாத குழந்தையின் கழுத்தை கத்தியால்

சென்னை புழல் அருகே கஞ்சாபோதையில் இருந்த இளைஞர், ஆறு மாத குழந்தையின் கழுத்தில் 3 இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார்.

லட்சுமிபுரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த விவேக்குமார் – ப்ரியா தம்பதியினருக்கு சாய்சரண் என்னும் ஆறு மாத குழந்தை உள்ளது.

இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆகாஷ் எனும் இளைஞரின் பெற்றோர், ப்ரியாவிடம் வீட்டு சாவியை கொடுத்துவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ப்ரியாவிடம் இளைஞர் ஆகாஷ், தனது வீட்டு சாவியை கேட்டுள்ளார்.

ஆனால் ப்ரியா தன்னிடம் சாவி இல்லை எனக்கூறியதால், ஆத்திரமடைந்த இளைஞர், குழந்தை சாய்சரணின் கழுத்தை கத்தியால் அறுத்து தப்பியோடினார்.

அப்போது இளைஞர் கஞ்சாபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தை சாய்சரணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், ஆகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

விஜய் டிவியிடம் விளக்கம் கேட்கும் மதுமிதாவின்

Tags
Show More

Related Articles

Back to top button
Close