இலங்கை செய்திகள்

300 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வறட்ச்சி நிவாரண உதவிதிட்டம் வழங்கிவைப்பு

கடந்த நாட்களில் வறட்ச்சி காரணமாக கிளிநொச்சியை சேர்ந்த பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன அநேகமான குடும்பங்கள் விவசாயம் மீன் பிடி மற்றும் தோட்டச்செய்கையில் பாரிய அளவில் நட்டத்தை எதிர் கொண்டனர்

பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த அநேகமான மக்கள் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து தங்களுடைய பெயர் விபரங்கள் மற்றும் நட்ட விபரங்களை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்திலும் பதிவு செய்துள்ளனர் ஆனாலும் பதிவு செய்த அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தினால் வறட்ச்சி நிவாரணம் வழங்கபடவில்லை

அரசாங்கத்தினால் குறித்த நிவாரணம் வழங்கப்படாத உண்மையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தேவையுடைய 300 குடும்பங்களுக்கு மன்னார் மாவட்ட சமூக பொருளாதர மோம்பாட்ட நிறுவனத்தினரால் (msedo) வறட்சி நிவாரண உதவி திட்டம் வழங்கிவைக்கப்பட்டது

குறித்த வறட்சி நிவாரண உதவி திட்டத்தின் பயணாளர்கள் தெரிவானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்;க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட சமூக பொருளாதர மோம்பாட்ட நிறுவனத்தின் (msedo) தலைவர் இருவருக்கும் இடையிலான கலந்தாலோசனையின் பின் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் முன் மொழிவினுடைய அடிப்படையில் பூநகரி பிரதேச

செயலகத்திற்குட்பட்ட மிகவும் பின் தங்கிய வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட பரமன்கிராய் மற்றும் கௌதாரி முனை ஞானி மடம் செட்டியார் குறிச்சி கொள்ள குறிச்சி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

மேற்படி வறட்சி நிவாரண உதவி திட்டம் வழங்கி வைக்கும் நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட சமூக பொருளாதர மோம்பாட்ட நிறுவனத்தின் (msedo) தலைவர் யோ.யாட்சன் பிகிறாடோ மற்றும் அளநனழ நிறுவனத்தின் ஊழியர்கள் கிராம சேவகர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வறட்சியால் பாதிக்கப்பட் ஓவ்வொரு குடும்களுக்கும் சுமார் 4000 ரூபா பெறுமதியான மா சீனி அரிசி உள்ளடங்களான வறட்சி நிவாரண பொதிகளை வழங்கிவைத்தனர்

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close