Breaking News
Home / இந்தியா செய்திகள் / மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு
மகா புயல்

மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

மகா புயல் குஜராத் கடற்கரையை நோக்கி செல்வதால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 6 மற்றும் 7ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ராஜ்கோட், போர்பந்தர், அகமதாபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை மகா புயலால் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மகா புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதால், வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில், மழையின் தாக்கம் குறைந்து காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக பேரிடர் குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க :

மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.

மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

Check Also

மருத்துவமனை

கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா …