உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதல்

அப்பாவி மக்கள் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதல்

இந்தநிலையில் அங்குள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் சுர்க் ரோடு மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் சிலர் நேற்று முன்தினம் அங்குள்ள பஜாருக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு 2 வாகனங்களில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது வான்தாக்குதல் நடந்தது. குறிப்பாக போர் விமானம் மூலம் வீசப்பட்ட ஒரு ஏவுகணை அந்த வாகனங்கள் மீது வந்து விழுந்தது.

இதில் அந்த வாகனங்களில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் என்று மாகாண அரசு செய்தி தொடர்பாளர் அதயுல்லா கோகியானி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு முதல் இதுவரை நடந்த போர் தொடர்பான தாக்குதல்களில் மொத்தம் 2,817 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 7,955 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த புள்ளி விவரங்களை ஆப்கானிஸ்தான் சுதந்திர மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்டுள்ளது.

போலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு

டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் அரவிந்த்கெஜ்ரிவால்.!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close