Wednesday , January 16 2019
Home / த‌மிழக‌ம் / கமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்
கமல் கட்சியின்

கமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தானும் ஒரு தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்ட கமல்ஹாசன், தனது கட்சிக்கென ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கும்படி இன்னும் கோரிக்கை விடுக்கவில்லையாம்.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு சின்னம் கேட்டு நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்திடம் இருந்து இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை என கூறியுள்ளது.

அதேபோல் ரஜினி-மூப்பனார் ஆசி பெற்ற ‘சைக்கிள் சின்னத்தை ஜிகே வாசன் தனது கட்சிக்கு கேட்டுள்ளதாகவும், தினகரன் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தொப்பி சின்னத்தை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Check Also

வாழைச்சேனையில் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொலை!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4 பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சனூஸ்தீன் முகம்மட் சகீர் எனும் …