Saturday , July 20 2019
Home / இலங்கை செய்திகள் / மரணத் தண்டனையை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம்

மரணத் தண்டனையை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

மரணத் தண்டனையை தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்விடயம் குறித்து இலங்கைக்கு மீண்டும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“பிரான்ஸ், ​ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா, நோர்வே மற்றும் சுவிட்ஸலாந்தின் தூதுவராலயம், அவுஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றின் இணக்கப்பாட்டுக்கு அமையவே இந்த அறிவித்தலை மீண்டும் வெளியிட்டுள்ளோம்.

அந்தவகையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 43 வருடங்களின் பின்னரே இலங்கையில் மரணத் தண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். இதற்காக மரணத் தண்டனையை அமுல்படுத்த முனைவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் போதைப்பொருள் கடத்தலை, தடுப்பது குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் தயாராக உள்ளோம்” என அவ்வறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல்

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …