Breaking News
ஓவரா பாசமழையை பொழிறாங்க

ஓவரா பாசமழையை பொழிறாங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனுக்கு ஐஸ்வர்யா மற்றும் மும்தாஜை போட்டியாளர்கள் அதிகம் நாமினேட் செய்வதாக புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 2 தமிழ் 75 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களே மீதமுள்ள நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து டேனியல் வெளியேற்றப்பட்டார்.

இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வார நாமினேட் ப்ராசஸ் துவங்கியுள்ளது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், ‘இந்த வீட்டுக்கு அன்பு தேவை தான் ஆனால் அன்பு மட்டுமே போதாது என்று விஜயலக்ஷ்மி மும்தாஜை குறி வைத்து நாமினேட் செய்கிறார்.

பாலாஜியும் ரொம்ப ஒருத்தர் மேலே அன்பு வச்சிக்குறது, அது வெளியே தெரியணும்னு காம்மிச்சுக்குறது என்று மீண்டும் மும்தாஜை டார்கெட் செய்ய ரித்விகாவோ ஐஸ்வர்யா ஒரு ஸ்டாங்கான கண்டெஸ்ட்டண்ட் தெரிஞ்சோ தெரியாமலையோ அவங்களால நம்ம எல்லாரும் ஷைன் ஆகிட்டு இருக்கோம்ன்னு சொல்ல அடுத்தடுத்து பாலாஜி, ஜனனி என்ன எல்லாரும் ஐஸ்வர்யா மற்றும் மும்தாஜை நாமினேட் செய்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

ஜனனி, ரித்விகா இருவரும் கமல் முன்னிலையில் ஐஸ்வர்யாவை அவரது தோழி யாஷிகா தான் காப்பாற்றி வருகிறார்.

மக்கள் சொல்லட்டும் நான் அவரைத் திறமையானவராக ஏற்றுக்கொள்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இந்த வாரம் அதை ஐஸ்வர்யா நிரூபிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …