Breaking News
ஆடைத் தொழிற்சாலை இதுவரையில் 1034 பேருக்கு கொரோனா..!

ஆடைத் தொழிற்சாலை இதுவரையில் 1034 பேருக்கு கொரோனா..!

ஆடைத் தொழிற்சாலை இதுவரையில் 1034 பேருக்கு கொரோனா..!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 202 பேருக்கு தொற்றுறுதியானதை அடுத்து, அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 459 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் தொற்றுதியான, வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 5 பேர் இந்த எண்ணிக்கையில் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய, வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்று 8 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொவிட் 19 நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பெரிய கொத்தணியாக மினுவாங்கொடை – ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கந்தகாடு முகாம் மற்றும் சேறுவில கடற்படை முகாம் என்பன அதிகபடியான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொத்தணிகளாக இருந்தன.

இந்த நிலையில், ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் பதிவாகும் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மனைவி, மகனை கொன்று விட்டு தமிழர் தற்கொலை

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …