தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

பிறந்த குழந்தை யாருடையது – குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம் !

பிறந்த குழந்தை யாருடையது – குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம் !

விருதுநகர் மாவட்டத்தில் 11 மாதக் குழந்தையை பெற்றோரே குடும்பத்தாரின் உதவியோடு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவர் பள்ளி மாணவி ஒருவரைக் காதலித்துள்ளார். அதனால் அந்த மாணவி கர்ப்பமாக இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் தனது மனைவிக்கும் அவரது மாமன் மகளுக்கும் தொடர்பு இருந்ததை அமல்ராஜ் கண்டுபிடித்துள்ளார். இதனால் இப்போது பிறந்திருக்கும் குழந்தை யாருடையது என்பதில் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் அமல்ராஜ் அவரது பெற்றோரும் குழந்தையைக் கவனிப்பது கூட இல்லை. இதையடுத்து அமல்ராஜ் அந்த குழந்தையைக் கொலை செய்துவிட்டால் நாம் இருவரும் சந்தோஷமாக வாழலாம் என மனைவியிடம்
அறிவுரை கூறியுள்ளார்.

இதையடுத்து அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் காவல் காக்க, பெற்ற தாயே அந்த பெண்ணை கிணற்றில் மூழ்க வைத்துக் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் எப்படியோ போலிஸுக்குத் தெரிய வர, தனது மகளைக் காப்பாற்ற அந்த பெண்ணின் அப்பா, அமல்ராஜ்தான் கொலை செய்ததாக போலிஸில் புகார் அளித்துள்ளார்.

இதன் பிறகு போலிஸார் நடத்திய விசாரணையில் குடும்பமே சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசமான பகிடிவதை: திருமலையைச் சேர்ந்த மற்றொரு மாணவனுக்கும் தடை!

கொரோனாவை ஒழிக்க நித்யானந்தா கூறும் எளிய வழி

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close