தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

காதலித்த மகனை விலங்கிட்ட தந்தை!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் காதலித்த மகனை தந்தை விலங்கிட்டு வீட்டில் அடைத்து வைத்த சம்பவ்ம் நிகழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி வயது 21 அதே பகுதியை சார்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் வீட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி செய்த போது பெண்ணின் உறவினர் நேற்றைய தினம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் கருபசாமி மீது புகார் செய்தனர்.

உடனே காவல்துறை விசாரணை செய்ததில் பெண்ணின் திருமணவயது பூர்த்தியாகததால் இருவரையும் எச்சரிக்கை செய்து தனித் தனியே பெற்றோர்களிடம் ஒப்படைத்ததனர் நேற்று இரவு மீண்டும் தன் காதலிவீட்டிற்கு சென்று 17 வயதான இளம் பெண்ணை கருப்பசாமி கூட்டிட்டு ஓட முயற்சித்துள்ளார்.

இதை தந்தை கண்டித்ததால் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வேன் என்றதால் தன் மகனின் கை காலில் விலங்கிட்டு வீட்டில் அடைத்து வைத்தார். இது குறித்து கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் பரிமளா விசாரணை செய்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு உருவானது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close