Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil nadu News | Sri Lanka Tamil News | Jaffna News https://tamilnewsstar.com Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news, Dinamalar,leading Tamil Daily News website,Tamil Nadu News,Tamil News Paper,tamil news paper,Tamilnadu Temples, India News, World News, Political News, Business News, Financial News,Sports News update online tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,news in tamil,Tamilnadu Temples, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper Tamil News, Latest Tamil News, Tamil News LIVE, Tamil News Online, Tamilnadu News Live, Tamil news paper, today Tamil news, Tamil news today, online Tamil news , Read tamil latest news, headlines in tamil, daily updates, breaking news in tamil, google tamil news, tamil news headlines, tamil cinema news, live tamil news online,Jaffna News Wed, 28 Oct 2020 03:00:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.5.1 https://tamilnewsstar.com/wp-content/uploads/2020/08/cropped-rsz_1tns_ny-32x32.png Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil nadu News | Sri Lanka Tamil News | Jaffna News https://tamilnewsstar.com 32 32 யாழில் கோர விபத்து – சாரதி பலி https://tamilnewsstar.com/accident-in-jaffna-driver-killed/ Wed, 28 Oct 2020 03:00:42 +0000 https://tamilnewsstar.com/?p=36881 யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த மகிழூர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இராச வீதி ஊடாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த மகிழூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் வாகனத்தின் சாரதி தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த சிவன் சரல தீபன்(வயது 23) பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்

]]>
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல் https://tamilnewsstar.com/new-information-released-by-the-government-information-department/ Wed, 28 Oct 2020 02:22:27 +0000 https://tamilnewsstar.com/?p=36878 அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவல்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு முதல் பாணந்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்ககு உத்தரவானது பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய காவல் துறை பகுதிகளிலும் நடைமுறையில் காணப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றிரவு முதல் மீள் அறிவித்தல் வரை அமுலாகும் வகையில் பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, மொரட்டுவ, ஹோமாகம, ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் – ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கருத்துக் கணிப்பு

]]>
இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் – ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கருத்துக் கணிப்பு https://tamilnewsstar.com/young-americans-to-vote-in-higher-numbers-bidens-favourability/ Wed, 28 Oct 2020 02:16:24 +0000 https://tamilnewsstar.com/?p=36875 இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் – ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கருத்துக் கணிப்பு

அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாகவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு உயர்வு

]]>
ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு உயர்வு https://tamilnewsstar.com/corona-mortality-rise-in-russia-wearing-face-shields/ Wed, 28 Oct 2020 02:09:33 +0000 https://tamilnewsstar.com/?p=36872 ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு உயர்வு

ரஷ்யாவில் தொடக்கத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது குறைந்த அளவில் கொரோனா பாதிப்புகள் இருந்து வந்தன. இதன்பின்னர் இந்த எண்ணிக்கை அதிரடியாக உயர தொடங்கியது.

இதனால் உலகில் அதிக கொரோனா பாதிப்புகள் கொண்ட நாடுகளின் வரிசையில் 15.47 லட்சம் பேருடன் 4வது இடத்தில் உள்ளது. இதேபோன்று அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 26,589 ஆக உள்ளது.

தொடர்ந்து நாள்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சம் அடைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, அந்நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்கமைப்பு வகுத்துள்ள விதிகளின்படி, மக்கள் நெருக்கடி மிக்க இடங்கள், பொது போக்குவரத்து, டாக்சிகளை பயன்படுத்தும்பொழுது மற்றும் லிப்ட்களில் செல்வோர் முக கவசங்களை அணிய வேண்டும்.

இதேபோன்று இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை பொது நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கபேக்கள் மற்றும் உணவு விடுதிகளை மூடி வைத்திருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடி

]]>
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடி https://tamilnewsstar.com/worldwide-the-number-of-people-recovering-from-corona-2/ Wed, 28 Oct 2020 02:00:41 +0000 https://tamilnewsstar.com/?p=36854 உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடி

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,42,21,963 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,24,29,401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,06,21,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 772 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 90,34,232, உயிரிழப்பு – 2,32,014, குணமடைந்தோர் – 58,72,959
இந்தியா – பாதிப்பு – 79,88,853, உயிரிழப்பு – 1,20,054, குணமடைந்தோர் – 72,57,194
பிரேசில் – பாதிப்பு – 54,40,903, உயிரிழப்பு – 1,57,981, குணமடைந்தோர் – 49,04,046
ரஷியா – பாதிப்பு – 15,47,774, உயிரிழப்பு – 26,589, குணமடைந்தோர் – 11,58,940
பிரான்ஸ் – பாதிப்பு – 11,98,695, உயிரிழப்பு – 35,541, குணமடைந்தோர் – 1,12,716

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -11,74,916
அர்ஜென்டினா – 11,16,609
கொலம்பியா – 10,33,218
இங்கிலாந்து – 9,17,575
மெக்சிகோ – 8,95,326
பெரு – 8,92,497
தென்னாப்பிரிக்கா – 7,17,851
ஈரான்- 5,81,824
இத்தாலி – 5,64,778
சிலி- 5,04,525

Today rasi palan – 28.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 28, 2020)

]]>
Today rasi palan – 28.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 28, 2020) https://tamilnewsstar.com/today-rasi-palan-28-10-2020/ Tue, 27 Oct 2020 18:02:23 +0000 https://tamilnewsstar.com/?p=36867 Today rasi palan – 28.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 28, 2020)

 

இன்றைய ராசிப்பலன் – 28.10.2020

மேஷம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன உளைச்சல் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் சற்று குறையும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

கன்னி

இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருள் சேரும்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு

இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாககூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மீனம்

இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.

 

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001

]]>
Today rasi palan – 27.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 27, 2020) https://tamilnewsstar.com/today-rasi-palan-27-10-2020/ Tue, 27 Oct 2020 08:14:02 +0000 https://tamilnewsstar.com/?p=36864 Today rasi palan – 27.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 27, 2020)

 

இன்றைய ராசிப்பலன் – 27.10.2020

மேஷம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கன்னி

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.

 

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,
சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001

]]>
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது https://tamilnewsstar.com/russia-is-the-biggest-threat-to-us-security/ Tue, 27 Oct 2020 03:41:51 +0000 https://tamilnewsstar.com/?p=36861 அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவில் வருகிற 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடனும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலில் ரஷியா, ஜனாதிபதி டிரம்புக்கு ஆதரவாக செயல்படலாம் என ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ரஷியாவிடம் இருந்து பணம் வாங்கியதாக குற்றம் சாட்டுகிறார். இந்த 2 குற்றச்சாட்டுகளையும் ரஷியா மறுக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் ‘அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

அடுத்ததாக, அமெரிக்காவுக்கு பெரும் போட்டியாக சீனா உள்ளது. நாம் இதனை எவ்வாறு கையாள்வது என்பதை பொறுத்திருத்து பார்ப்போம்’ என்றார்.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடி

]]>
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடி https://tamilnewsstar.com/worldwide-the-number-of-corona-victims-has-risen-to-5/ Tue, 27 Oct 2020 03:24:40 +0000 https://tamilnewsstar.com/?p=36858 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடி

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,37,62,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,21,56,968 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 64 ஆயிரத்து 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,04,41,723 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 78 ஆயிரத்து 877 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 89,59,933, உயிரிழப்பு – 2,31,028, குணமடைந்தோர் – 58,22,334
இந்தியா – பாதிப்பு – 79,45,588, உயிரிழப்பு – 1,19,535, குணமடைந்தோர் – 71,98,715
பிரேசில் – பாதிப்பு – 54,11,550, உயிரிழப்பு – 1,57,451, குணமடைந்தோர் – 48,65,930
ரஷியா – பாதிப்பு – 15,31,224, உயிரிழப்பு – 26,269, குணமடைந்தோர் – 11,46,096
பிரான்ஸ் – பாதிப்பு – 11,65,278, உயிரிழப்பு – 35,018, குணமடைந்தோர் – 1,11,347

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -11,56,498
அர்ஜென்டினா – 11,02,301
கொலம்பியா – 10,25,052
இங்கிலாந்து – 8,95,690
மெக்சிகோ – 8,91,160
பெரு – 8,90,574
தென்னாப்பிரிக்கா – 7,16,759
ஈரான்- 5,74,856
இத்தாலி – 5,42,789
சிலி- 5,03,598

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல்

]]>
ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல் https://tamilnewsstar.com/airstrikes-in-afghanistan-17-taliban-terrorists-concentrated/ Tue, 27 Oct 2020 03:18:27 +0000 https://tamilnewsstar.com/?p=36841 ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள வார்டாக் மாகாணத்தின் சயீத் அபாத் மாவட்டத்தில் ராணுவம் அதிரடி வான் தாக்குதலை நடத்தியது.

தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் தலீபான் பயங்கரவாதிகள் 17 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடி

]]>