Breaking News

அட்டாளைச்சேனையில் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

அட்டாளைச்சேனையில் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தில் இன்று (29) அதிகாலை பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் நால்வரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பு நகரில் உள்ள வீடு ஒன்றில் மற்றொரு பெண்ணுடன் உறங்கிக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை, நால்வர் அழைத்துச் சென்று வயல் பிரதேசத்தில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தெரிய வந்ததையடுத்து பொலிஸ் பெருங் குற்றப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நால்வரையும் கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட 42 வயதுடைய பெண் கூலித்தொழில் மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன் அட்டாளைச்சேனை சம்பு நகர் பிரதேசத்துக்கு வந்து மற்றொரு பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐநா அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினராக தமிழர் நியமனம்!

இர்பான் கானின் கடைசி ஆசை!


Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …