உலக செய்திகள்முக்கிய செய்திகள்

மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீ விபத்து

15 குழந்தைகள் பலி

மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீ விபத்து

மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் இருந்தனர்.

திடீரென அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீவிபத்தில் சிக்கி 15 குழந்தைகள் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த குழந்தைகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்

இஸ்லாமியர்களுக்கு ஒன்னுனா வருவேன்னு சொன்னீங்களே

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close