முக்கிய செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 18 மீனவர்கள் இன்று தாயகம் வருகை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 18 மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 18 மீனவர்கள் இலங்கை கடற்படையால் இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு குறித்து விசாரித்த இலங்கை நீதிமன்றம், மீனவர்களை விடுதலை செய்து, விசைப்படகுகளின் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 25-ம் தேதி உரிமத்தை கொண்டு வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 18 மீனாவர்களும் இன்று நாடு திரும்புகின்றனர். அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு வைக்கப்படுவதால் அவர்களை அழைத்து வருவதற்காக மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் மதுரை விமான நிலையத்துக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close