இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

டில்லியில் 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை!

- குடியரசு தின விழாவையொட்டி

இந்தியாவின் குடியரசு தின விழாவையொட்டி டில்லி விமான நிலையத்தில் 7 நாட்கள் (ஜனவரி 18, 20, 21, 22, 23, 24, 26) சுமார் 2 மணி நேரம், விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

குடியரசு தின விழாவுக்காக நடைபெறும் ஒத்திகைக்காகவும், விழா நாளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி மற்றும் 20 முதல் 24ஆம் திகதி வரையிலும் மற்றும் குடியரசு தின விழா நடைபெறும் நாளான 26ஆம் திகதியும் டில்லி விமான நிலையத்தில் இருந்து, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவை காலை 10.35 மணி முதல் பகல் 12.15 மணி வரை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாட்களில் டில்லி வழியாக வான்வெளி மூடப்பட உள்ளதால், அனைத்து விமான நிறுவனங்களின் விமான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close