Breaking News

ஞாபகப் பூக்கள்

ஞாபகப் பூக்கள்

வன்னிமண்ணில்
வாழ்ந்த நாட்கள்
விழிகளுள் நிழலாடுகின்றது..

பள்ளிக்கூடத்தின்
கதிரைகளில் இருந்த பொழுதுகளில் விட
பங்கருக்குள் இருந்த பொழுதுகள்
அதிகமானவை..

தண்ணீரில் குளித்த
நேரங்களை விட “புக்காரவுக்கும்,கிபீர்க்கும்”
பயந்து வியர்வையில் குளித்த நாட்கள்…
நீண்டவை….

கரும்பலகைகளை
பார்த்து படித்ததில்லை
வானத்தை பார்த்தே
படித்திருக்கின்றோம்

காதில் செவ்வரத்தம் பூ
வைத்து வரும் நண்பனும்
கூவி வந்த எறிகணையில்
விழிமடல் மூடிப்போன
தோழியின் குறும்புகளும்
மனதோரம்
நினைவின் நிழல்களாய்…

ஆடிப்பாடிய பள்ளிமுற்றமும்
கிளித்தட்டு விளையாடிய
புளியமரத்து நிழலும்
மனதோரம் நினைவின் நிழல்களாய்…..

வீசிவரும் உப்புக் காற்றும்
பரவசமாய் சிரித்த தென்னங்கீற்றும்
விழிகளுள் இப்போதும்
ஞாபக கீற்றுக்களாய்….

பசுமை போர்த்திருந்த
வன்னி வயல்களும்
சுதந்திர பறவைகளும்
நினைவுகளில் பறக்கின்றது..

கல்லெறிந்த புதுக்குடியிருப்பு இலந்தையும்
ஏறி இறங்கிய இரணப்பாலை பாலையும்
நாவிலே நினைவாய்
இனிக்கிறது
நியத்துக்காய் ஏங்குகின்றது…

வந்தாரை வரவேற்க்கும்
வன்னிமண்
வாசலிலே வரவேற்க்கும்
பெருமரங்கள் நிழலாய்…
…………………………
……………………

ஆ.முல்லைதிவ்யன்

சாஜாவில் 45 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பாரிய தீ விபத்துசாஜாவில் 45 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பாரிய தீ விபத்து

இந்தியர்களை 64 விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கைஇந்தியர்களை 64 விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …