Breaking News

வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்

வவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்?
அப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில் பதிய வைத்திருப்பீர்கள். அந்த முகங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்கி வைத்திருப்பீர்கள்.

ஆனால் வவுனியாவிற்கு வரும் புதியவர் ஒருவர் நிச்சயம் நிலை தடுமாறிவிடுவார். கண்ணசைவு, உதட்டு சுழிப்பு என நகரத்தின் ஓரங்களில் நிற்கும் இளம்பெண்களின் சைகை அழைப்புக்கள் அவர்களை நிலைகுலைய வைக்கும். வடக்கு, கிழக்கில் இவ்வளவு பகிரங்கமாக பெண்கள் அழைப்பு விடுப்பதை அவர்கள் பார்த்தேயிருக்க மாட்டார்கள்.

ஆம். வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழிலின் கறுப்பு பக்கங்களிற்குள் உங்களை அழைத்து செல்கிறோம்.

நகரத்தின் சனசந்தடியான இடங்களில் பகிரங்கமாக உலாவும் பாலியல் தொழிலாளிகள், தரகர்கள் மற்றும் பாலியல் தொழில் நடக்கும் விடுதிகள் பற்றிய அதிர்ச்சி தகவல்களின் தொகுப்பு இது.

வவுனியா மூவின மக்களின் சந்திப்பு புள்ளி. மூவின மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை இணைக்கிறது. வவுனியாவிலும் மூவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.

இனநல்லிணக்கம் பற்றி பேசப்படும் இன்றைய காலத்தில், மூவினத்தவர்களும் அமைதியாக வாழும் வவுனியாயை முன்னுதாரணமாக காட்டுபவர்களும் உள்ளனர். ஆனால், இந்த சங்கமத்தின் மறுபக்கங்களில் ஒன்றே கொடிகட்டிப்பறக்கும் பாலியல் தொழில்.

வடக்கின் நுழைவாசல் வவுனியா. அதாவது, தெற்கின் பின்கதவு. சட்டவிரோத காரியங்களை பின்கதவால் செய்வதாக கூறுவார்கள். வவுனியாவிலும் அதுதான் நடக்கிறது.

வவுனியாவின் எல்லையோர கிராமங்கள், மதவாச்சி பகுதிகளிலிருந்து வவுனியா நகரத்திற்கு பல்வேறு தேவைகளிற்காக வருவதைபோல நாகரிகமாக உடுத்திக்கொண்டு வரும் சிங்கள இளம்பெண்கள் பலர், வவுனியா நகரத்தில் எடுக்கும் மறுஉருவமே பாலியல் தொழிலாளிகள்!

இதனால் இன்று வவுனியா நகரமே கலாசாரத்தின் கறுப்பு பக்களில் குறிப்பிடப்படும் இடமாகி வருகிறது. நகரத்தில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் போக வேண்டுமென்றால் எந்த சிரமமும் இல்லாமல் உடனடியாக தொடர்புகொள்ளத்தக்கதாக நிறைந்து வழிகிறார்கள்.

இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தூர இடங்களை சேர்ந்த சிங்கள யுவதிகள். தமிழில் கொச்சையாக பேசுவார்கள். இதைவிட, பாலியல் தொழிலாளிகளிடம் வாடிக்கையாளர்களை கொண்டு செல்வதற்கு நிறைய தரகர்களும் நகரத்தில் இருக்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள்.

மத்திய பேரூந்து நிலையம், உள்வட்ட வீதி, முதலாம் குறுக்குதெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, இலுப்பையடி என மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் இவர்களை அதிகமாக காணலாம். 18 வயது தொடக்கம் 25 வயது வரையான யுவதிகள் வீதிக்கரைகளில் நிற்பார்கள்.

இவர்களின் தோற்றம் புதியவர்களிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தாது. தூர இடங்களிற்கு செல்லும் பயணிகளை போல பயணபொதிகளை வைத்துக்கொண்டோ, வவுனியா உயர்கல்வி நிறுவனங்களில் கற்பவர்களை போன்றோதான் பெரும்பாலும் தோற்றம் அளிப்பார்கள்.

வீதியோரம் நின்றபடி ஒவ்வொருவரையும் நுணுக்கமாக அவதானிக்கிறார்கள். தமது கணக்கு சரியென உணரும் ஆண்களை கண்ஜாடை காட்டி அழைப்பார்கள்.

சற்று ஆளரவம் குறைந்த அல்லது இருளான சமயம் என்றால் கடந்து போகும் ஆணின் கையை எட்டிப்பிடித்து விடுகிறார்கள்.

பாலியல் தொழிலாளிகளாக வவுனியாவிற்கு வரும் சிங்கள யுவதிகள் பெரும்பாலானவர்களிற்கு தமிழில் கொச்சையாகவாவது பேச தெரிகிறது. இவர்களை விட, மிகக்குறைந்தளவிலான தமிழ் யுவதிகளும் உள்ளனர்.

இவர்களில் சிலர் வவுனியாவை சேர்ந்தவர்கள். இன்னும் சிலர் முல்லைத்தீவு, கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் பேசும்போது, யுத்தப் பாதிப்புக்கள்தான் தம்மை பாலியல் தொழிலை நோக்கி தள்ளியதாக கூறுகிறார்கள். எனினும், பேரூந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் நடமாடும் பாலியல் தொழிலாளிகளாக இருப்பவர்கள் சிங்கள யுவதிகளே.

கண் ஜாடையாலோ, கையைப் பிடித்தோ ஓரம்கட்டும் ஆண்களிடம் தயக்கமில்லாமல் நேரடியாகவே டீலை பேசுகிறார்கள்.

‘ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு தருவியள்?’ என பேரத்தை ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் 5000 ரூபாவிலிருந்தே ஆரம்பிக்கிறார்கள். ஆகக்குறைந்த தொகை 2000 ரூபா. வயது, அழகு, தோற்றம் பணத்தை தீர்மானிக்கிறது.

பேரம் படிந்தால் முச்சக்கரவண்டிகளில் சில விடுதிகளிற்கு செல்கிறார்கள். நம்பிக்கையான- பாலியல் தொழில் வலையமைப்பில் உள்ள முச்சக்கரவண்டிகளைத்தான் இதற்கு பாவிக்கிறார்கள்.

முதலாம் குறுக்குத்தெரு, தேக்கவத்தை பகுதிகளில் உள்ள சில விடுதிகள்தான், வவுனியா நகரத்தின் நடமாடும் பாலியல்தொழிலாளிகளின் நம்பிக்கைக்கு பத்திரமான இடங்கள்.

பாலியல் தொழிலாளிகளின் தொலைபேசி இலக்கங்கள் இப்பொழுது வவுனியாவில் பரவலடைந்து விட்டன. ஒரு பாலியல் தொழிலாளியுடன் பேசியபோது, தனக்கு தொலைபேசி மூலமாகவே அதிக வாடிக்கையாளர்கள் வருவதாக கூறினார்.

தொலைபேசி இலக்கத்தை எப்படி பரவலடைய வைத்தீர்கள் என்றதற்கு, வாடிக்கையாளர்களிடம் சிலகாலம் கொடுத்ததும் அது பரவலடைந்து விட்டதென்றார்.

இதைவிட இன்னொருவிதமாகவும் பாலியல் தொழில் நடக்கிறது. இது பெருமெடுப்பிலான ஏற்பாடு. வவுனியா நகரம், தேக்கவத்தையிலுள்ள சில விடுதிகளால் நடத்தப்படும் பாலியல் தொழில்.

சிங்கள பகுதிகளிலிருந்து அழகிய இளம் யுவதிகளை அழைத்து வந்து தமது விடுதிகளில் தங்கவைக்கிறார்கள். பின்னர், நகரத்தில் சில தரகர்களின் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள்.

ஒரு வாடிக்கையாளரை அழைத்து சென்றால் 1,000- 3,000 ரூபாய் வரை ஒரு தரகர் பெறுகிறார். நகரத்தில் தரகர்களாக அலைபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். நகரத்திற்கு வருபவர்களை மடக்கி, விடுதிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள்.

ஒருமுறை இவர்களுடன் பேச ஆரம்பித்தாலே விட மாட்டார்கள். பின்னாலேயே வந்து நச்சரிப்பார்கள். ‘சேர்…சேர்… வந்து பாருங்க.

ஆளைப்பார்த்திட்டு மிச்சத்தை சொல்லுங்க. ரேட்டையும் அங்கயே பேசலாம்’ என ஆட்களிற்கு மத்தியில் அவர்கள் கொடுக்கும் தொல்லையிலேயே பாதிப்பேர் சத்தமில்லாமல் கூடச் சென்றுவிடுவார்கள்.

இந்த விடுதிகளில் மிக அதிக கட்டணம் அறவிடப்படுகிறது. மணித்தியாலத்திற்கு 10,000- 50,000 ரூபா வரை அறிவிடுகிறார்கள்.

இதில் ஒரு பகுதி பாலியல் தொழிலாளிக்கும், ஒரு பகுதி தரகருக்கும் செல்ல, எஞ்சியதை விடுதிகள் எடுத்துக்கொள்கின்றன.

அதிக வருமானம் ஈட்டுவதற்காக அழகிய, இளம் யுவதிகளை அழைத்து வந்து, கட்டணத்தை உயர்த்தி கேட்பதாக ஒரு தரகர் கூறினார். அந்த தரகர் தமிழ் பக்க செய்தியாளரிடம் கூறிய இன்னொரு அதிர்ச்சி தகவல்- வவுனியாவில் உள்ள பிரபல வர்த்தகர்கள் சிலரை குறிவைத்தே இந்த விடுதிகள் இயங்குகிறதாம்.

வவுனியா நகரத்தில் பாலியல் தொழில் இவ்வளவு பகிரங்கமாக நடந்தும், காவல்த்துறை ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது? பாலியல் தொழிலை வவுனியாவில் அங்கீகரித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

பேரூந்து தரிப்பிடம் மற்றும் நகரப்பகுதிகளில் பொலிசாரின் நடமாட்டம் அதிகளவில் இருந்தும், எப்படி பாலியல் தொழிலாளிகள் சுதந்திரமாக நடமாடி, வாடிக்கையாளர்களை பிடிக்கிறார்கள்?

ஆபத்தான புற்றுநோயாக வவுனியா நகரத்தில் வளர்ந்துவரும் பாலியல்தொழிலை கட்டுக்குள் கொண்டு வருவதே, ஆரோக்கியமானதும், கண்ணியமானதுமான சமூகத்தை உருவாக்க செய்ய வேண்டிய முதல்பணி. போலிசார் தொடக்கம் பொதுமக்கள்வரை அனைவரும் இதில் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …