Thursday , December 13 2018
Home / Headlines News / முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு!

முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு!

வடதமிழீழம் விசுவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

11.11.18 அன்று இரவு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 அகவையுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் போராளியின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில் குமாரபுரம் புன்னை நீராவியடியினை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் முன்னாள்போராளி இவர் மூன்று ஆண்டுகளாக புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்த இவருக்கு சிறு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இன்னிலையில் கடந்த 11.11.18 அன்று இரவு வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார்

இவரின் உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவ மனை கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்

13.11.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் பிரோத பரிசோதனையின் போது இவரது உயிரிழப்பு தொடர்பில் உறுதியான தகவலை வெளியிட முடியாத காரணத்தால் இவரது மரபணுக்கள் ஆய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மருத்துவ மனை மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளியின் வாழ்விடம் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் வருவதால் விசாரணைகளை தர்மபுரம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் 13 டிசம்பர் 2018 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2018, கார்த்திகை 27, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 01.49 வரை பின்பு வளர்பிறை சப்தமி. அவிட்டம் …