Breaking News
புதிய கொரோனா வைரஸ் பிரான்சுக்கும் பரவியது

புதிய கொரோனா வைரஸ் பிரான்சுக்கும் பரவியது

புதிய கொரோனா வைரஸ் பிரான்சுக்கும் பரவியது

பிரான்ஸ் நாட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

லண்டனில் இருந்து கடந்த 19-ந் தேதி பிரான்சின் டூர்ஸ் நகரத்துக்கு திரும்பியுள்ள பிரான்ஸ் குடிமகன் ஒருவருக்கு இந்த புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 21-ந் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்தது.

தற்சமயம் அவருக்கு அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், அவர் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் தேசிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இது புத்தாண்டுக்கு முந்தைய நாள் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரான்சுக்கு பைசர்-பயோ என்டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியின் முதல் தொகுப்பு, பெல்ஜியத்தில் இருந்து வந்து சேர்ந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இன்று செவ்ரான், டிஜோன் நகரங்களில் 2 இடங்களில் முதியோருக்கு முதலில் செலுத்தப்பட உள்ளது.

புதிய வகை கொரோனாவால் இதுவரை மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …