உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஐஎஸ் போராளிகள் வேண்டுமா..? ப்ளீஸ் சீரியஸாக பேசுங்க ட்ரம்ப்…!! மேடையில் பாய்ந்த பிரான்ஸ் அதிபர்..!!

பிரான்ஸ் நாட்டு அதிபரிடம், தரமான ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை தரட்டுமா என அமெரிக்க அதிபர் பொது மேடையில் வைத்து கேட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ராணுவம் அறிவியல் என எல்லாவற்றிலும் மிக சக்திவாய்ந்த வல்லரசு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அந்நாட்டின் அதிபரும் சர்வதேச நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த அதிபராக கருதப்படுகிறார்.

ஆனால் தற்போது அப் பதவியில் உள்ள ட்ரம்ப் அப்பதவிக்குறிய கண்ணியத்துடன் நடந்து கொள்வதில்லை என அவர்மீது விமர்சனங்கள் இருந்து வருகிறது.

அதை மெய்ப்பிக்கும் வகையில் அவர் லண்டனில் நடந்துகொண்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதேநேரத்தில் அது மிகவும் சுவாரசியமான சம்பவமாகவும் அமைந்துள்ளது.

அதாவது நோட்டோ மாநாட்டுக்கு இடையே லண்டனில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆகியோர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தில் இருந்து சிலரை திரும்ப ஏற்பது தொடர்பான விவகாரத்தில் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு முன்பாக சர்வதேச ஏராளமான ஊடகங்கள் திரண்டிருந்தன.

அப்போது ட்ரம்ப் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரானிடம், நல்ல தரமான ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை தரட்டுமா என கேட்க, ப்ளீஸ் தயவுசெய்து நாம் சீரியஸாக பேசலாம் என மேக்ரான் பதற்றமாக பதிலளித்தார்.

அப்போது ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்களை திரும்பப் பெறுவதில் பிரான்ஸ் பதிலளிக்காமல் தவிப்பதாகவும் மேடையிலேயே ட்ரம்ப் மெக்ரானை விமர்சித்தார்.

ஆனால், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை ஒழிப்பது தான் தமது அரசுக்கு முக்கியம் என்று மைக்ரான் அதற்கு பதிலளித்தார் . சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்திஷ் படையினர் சுமார் 2000 வெளிநாட்டு படைவீரர்களை சிரியாவிற்குள் சிறை வைத்துள்ளனர், இதில் 200 பேர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இது தவிர ஆயிரக்கணக்கான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/xaC9jhrSiH0

Tags
Show More

Related Articles

Back to top button
Close