Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு
ஜெர்மன்

ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 1,580 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் பொதுப்போக்குவரத்தின் பிரதான அங்கமான பேருந்துகளை மின்மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டீசல் வாகனங்களால் ஏற்படும் புகை மாசுபாடு மின்சார வாகனங்களில் அறவே கிடையாது என்பதால் பல்வேறு நாடுகளும் மின்சார வாகன போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையிலும் மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க FAME என்ற திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்திற்கு 525 மின்சாரப் பேருந்துகளை ஒதுக்கீடு செய்து மத்திய கனரக தொழில் அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் தலா 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இதே போன்று சேலம், ஈரோடு, திருப்பூர், மற்றும் வேலூர் உள்ளிட்ட நகரங்களில் தலா 25 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர தமிழகத்தில் மேலும் 300 மின்சாரப் பேருந்துகளை இயக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் உதவிகளை வழங்க ஜெர்மன் அரசு முன்வந்துள்ளது.

இதற்காக ஜெர்மன் வளர்ச்சி வங்கி குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் எனவும் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டு கடந்த செப்டம்பரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் இதனை உறுதி செய்தார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பேருந்து சேவையில் சீர்திருத்தம்
கொண்டு வருவதற்காக ஜெர்மனி முதலீடு செய்கிறது.

தமிழகத்தில் எலக்ட்ரிக் பேருந்து திட்டத்திற்காக ரூ.1,580 கோடி முதலீடு செய்யப்படுகிறது. காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பாகவும் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக எலக்ட்ரிக் பேருந்து பயன்பாடு குறித்தும் ஆரோக்கியமான வகையில் விவாதிக்கப்பட்டது என்றார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் சென்னையில் சமீபத்தில் இரண்டு மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரல் – திருவான்மியூர் வழித்தடத்தில் இவ்விரண்டு பேருந்துகளும் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

2030-ம் ஆண்டுக்குள் முழுவீச்சில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், மின்சார வாகன பயன்பாட்டில் முன்னுதாரணமாக திகழும் வகையில் தமிழக அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் பாருங்க :

நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!

ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

மருத்துவமனை

கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா …