ஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சந்தித்த கோட்டா!

ஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சந்தித்த கோட்டா!

அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி அலுவலகத்துக்கு அருகில் காலிமுகத்திடல் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நேற்றுமுன்தினம் முதல் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிக்கு நேற்றுப் பிற்பகல் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாடினார்.

2017ஆம் ஆண்டு முதல் எந்தவொருவரினதும் கவனத்துக்கு உள்ளாகியிருக்காத தமது சேவையை உறுதிப்படுத்தித் தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் மூலம் வழங்கப்படவுள்ள ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளின் கீழ் இந்த 1300 பேருக்கும் தொழில் வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார் என்று அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்த நாட்டின் ஒரே ஆட்சியாளரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சந்தித்த கோட்டா!

இன்றைய ராசிப்பலன் 08 பெப்ரவரி 2020 சனிக்கிழமை – Today rasi palan 08.02.2020 Saturday

Tamil News
Tamilnadu News
World Tamil News

About விடுதலை

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …