தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழக அரசு சுயமரியாதை இல்லாத அரசாக இருக்கிறது

தமிழக அரசு சுயமரியாதை இல்லாத அரசாக இருக்கிறது

தமிழகத்தில் உள்ள அரசு சுயமரியாதை இல்லாத அரசாக தமிழக உரிமைகளை காக்கின்ற கடமையை செய்யாத அரசாக இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கூட அதிரடியாக குண்டு வீசுவது போல் கொண்டு வந்து உள்ளனர். எல்லா அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கவில்லை.

சட்டத்தை ஆதரித்தவர்களே ஆதரித்து இருக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை நாட்டு மக்கள், பல மாநிலங்கள் எதிர்க்கின்றன. நடுநிலையாக இருந்தவர்கள் கூட எதிர்க்க வேண்டிய நிலைமை வந்து உள்ளது.

ஜனநாயகத்தை மதிக்க வேண்டிய நாளில் ஹைட்ரோகார்பன் உட்பட எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை. அதுப்போல் சுற்றுப்புறச் சூழலை கேட்க வேண்டியதில்லை என்று பாசிச சர்வாதிகார பாதையில் மத்திய அரசு சென்று கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு அதை தடுக்க சக்தியில்லாமல் திராணி இல்லாமல் சுயமரியாதை இல்லாத அரசாக தமிழக உரிமைகளை காக்கின்ற கடமையை செய்யாத அரசாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தந்தை பெரியார் காலங்களை வென்ற தத்துவம். புதுயுகத்தின் தொலைநோக்காளர். பெரியாரின் சிலையை திருட்டுத்தனமாக உடைக்கும் கயவர்கள் அவரது புகழை மறைக்க முடியாது.

யார் காரணமோ பின்புலத்தில் துண்டிவிட்டவர்கள் மீது போலீசார் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் பல மாநிலங்கள் இந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்து விட்டதாகவும், அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மூர்க்கத்தனமாக மத்திய அரசு செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

 

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close