தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு: அரசாணை வெளியீடு

அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட 6 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் திருச்சி மாவட்டம் சூரியூர், கருங்குளம் உள்ளிட்ட 4 இடங்களிலும், ஜனவரி 16 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான அரசாணையும், ஆணை குறித்து அரசிதழிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பாரம்பரியமாக நடைபெறும் இப்போட்டிகளில், ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தவுள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை நீங்கினாலும், ஆண்டுதோறும் அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

அதன் அடிப்படையில், 2020ம் ஆண்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, மதுரை மாவட்டம் அவனியாபுரம், கரூர் மாவட்டம் குளித்தலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களுக்கு கோட்டாவே முழுப் பொறுப்பு!

Tags
Show More

Related Articles

Back to top button
Close