Breaking News

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, “கருணாநிதி புகழுக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பத்திரிகையாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியிலும், இலக்கியத்துறையினர் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி மதுரையிலும், கலைத்துறையினர் சார்பில் கோவையிலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி நெல்லையிலும் நடைபெற்றது. இவை அனைத்திலும் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதன் நிறைவாக வருகிற 30-ம் தேதியன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் பட்டியலை திமுக வெளியிட்டது.

அதில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. திமுக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பது, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

திமுக பட்டியலில் அமித்ஷா பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …