Wednesday , December 19 2018
Home / Headlines News / வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது
வைகோவால்

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது

வைகோவால் எனக்கு தெம்பு கிடைத்தது என நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் தேசத்துரோக வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரது கைது நடவடிக்கை அனைவரையும் கொந்தளிப்படைய செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபால் வைக்கப்பட்டிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று வழக்கறிஞர் என்ற முறையில் கோபாலை சந்திக்க என்னை அனுமதிக்க வேண்டும் என கூறினார்.

ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அவர் அங்கு தர்ணா போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து கோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கோபால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என கருத்து தெரிவித்த எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் சட்டப்பிரிவு 124-ன் கீழ் கோபாலை கைது செய்திருக்க வேண்டியதில்லை எனக்கூறி கோபாலை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், தான் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் களத்திற்கே நேரடியாக வந்த வைகோவை நக்கீரன் கோபால் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் விமான நிலையத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது வந்த காவல்துறையினர் திடீரென எனது கைப்பேசியை பிடுங்கினர்.

அப்போது என்ன கைதா என்று கேட்டேன் இல்லை விசாரணைதான் என சொல்லி என்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அதனையடுத்து இந்த விவகாரம் தெரிந்து வைகோ வழக்கறிஞராக வந்திருக்கிறார் என என்னிடம் கூறினார்கள்.

அப்போது எனக்கு பெரிய தெம்பு கிடைத்துவிட்டது. மேலும் என்னை சந்திக்க அனுமதிக்க மறுக்கப்பட்டதால் அவர் தர்ணாவில் ஈடுபடுவதாகவும் பின்னர் அவரையும் கைது செய்துவிட்டார்கள் என கூறினர்.

இதன் பிறகு என்னை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது வைகோதான் என்றார்.

நீதிபதி கோபிநாத் தீர்ப்பால் நீதித்துறை மீது நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த கைது விவகாரத்தின் முகத்திரையை முதன்முதலில் கிழித்தது வைகோதான் அவருக்கு எனது நன்றி என கோபால் கூறினார்.

Check Also

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து!

நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. நடிகர் …