Breaking News
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

Headlines News

இன்றைய ராசிப்பலன் 19 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 19-03-2019, பங்குனி 05, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 02.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் இரவு 07.04 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் …

Read More »

கோட்டா களமிறங்கினால் ‘ராஜபக்ச’ குடும்பத்தினரின் அரசியல் வாழ்வுக்குச் சமாதி! – அடித்துக் கூறுகின்றார் ரணில்

“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி. அதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும்.” – இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் எமது கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும். எவர் களமிறங்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சிதான் வெற்றிவாகைசூடும்” எனவும் அவர் …

Read More »

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவா? இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை! – மைத்திரி தடாலடி

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இது தொடர்பில் பேச்சு நடத்துகின்றனர். அந்தப் பேச்சு சுமுகமாகப் போகின்றது. இறுதியில் தீர்க்கமான முடிவெடுக்கப்படும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடாலடியாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய களமிறங்குவார் என்றும், அதற்கு மஹிந்த ராஜபக்ச இணங்கியிருக்கின்றார் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு கொழும்பு …

Read More »

தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை!

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற  சர்வதேச அழுத்தம் மேலும் தேவை!! – ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் வலியுறுத்து “தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. அவர்களுக்குச் சரியானதைச் செய்வது தொடர்பில் சிங்களத் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள். இது தொடர்பில் சர்வதேசம் சமூகம் கூடிய கரிசனை கொள்ள வேண்டும். அதேவேளை, இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை.” – …

Read More »

ஜெனிவாவில் 21இல் இலங்கைக்கு அக்கினிப் பரீட்சை!

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும், இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்துப் பேசவுள்ளனனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் நாளைமறுதினம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த நாள், மார்ச் 21ஆம் திகதி , இலங்கை தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. …

Read More »

ஐ.நாவில் புதிய பிரேரணைக்காக பிரிட்டனுக்கு கூட்டமைப்பு நன்றி! – நேரில் சென்று தெரிவித்தார் சுமந்திரன் எம்.பி.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது தொடர்வதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கை தொடர்பாகப் புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கு பிரிட்டன் எடுத்த முயற்சிகளுக்காக அந்த நாட்டுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக இலண்டனில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியைச் சந்தித்து கூட்டமைப்பின் நன்றியைத் தெரிவித்தார். கூட்டமைப்பின் இலண்டன் …

Read More »

இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இதுவரை 20 நாடுகள் பேராதரவு!!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் – ஜேர்மனி தலைமையில் கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்துள்ளன. இந்தத் தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்தத் …

Read More »

சந்திரிகா மீண்டும் களத்தில்; சு.கவினருடன் முக்கிய பேச்சு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்கும் என மஹிந்த அணி திட்டவட்டமாக அறிவித்துள்ளதால், மைத்திரி தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கின்றது. இதனால், புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதிலும் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர், சந்திரிகா அம்மையாரைச் சந்தித்துப் …

Read More »

ரணிலே ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர்! – பொன்சேகா அதிரடி அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (17) தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். “ஐ.தே.கவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பதவி வகிக்கின்றார். தலைவர்தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும். அந்தவகையில், …

Read More »

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு இம்மாத இறுதியில்!

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த இது தொடர்பாக தெரிவிக்கையில், பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறினார். கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. Share4TweetSharePin+14 Shares

Read More »