Monday , October 22 2018
Home / Headlines News / மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
மாணவர்

மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற கல்வியற் கல்லூரி மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஆரையம் பதியில் உள்ள கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் கல்லூரியில் இணையும் பொது ஏழு பேர் கொண்ட மாணவ குழுவினால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் கல்லூரி செல்லமாட்டேன் என்று சொல்லி வீடு வந்து நின்ற மாணவனை மீண்டும் பெற்றோர் கல்லூரிக்கு கொண்டு சென்று விட்டுள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த மாணவன் 08.10.18 அன்று விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார் இந்த கொலையில் பெற்றோர்கள் சந்கேம்வெளியிட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பெற்றோர் உடலத்தினை மீட்டு முல்லைத்தீவிற்கு கொண்டுவருவதற்காக மட்டக்களப்பு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த உடலம் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

இலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை

ஸ்ரீலங்காவில் கணவன் – மனைவியினரில் 15 சதவீதத்துக்கும் அதிகமான தொகையினர் பிள்ளைப்பேறு அற்ற நிலையில் உள்ளனர் என இணங்காணப்பட்டுள்ளது என்று …