Monday , October 22 2018
Home / Headlines News / இளநீருக்குள் மயக்கமருந்து சாரதியிடம் கொள்ளை
இளநீருக்குள்

இளநீருக்குள் மயக்கமருந்து சாரதியிடம் கொள்ளை

இளநீருக்குள் மயக்கமருந்து கலந்து கொடுத்து கல்முனை ஆட்டோ சாரதியிடம் கொள்ளை (காத்தான்குடியில்)

கல்முனையை சேர்ந்த ஆட்டோ சாரதியான ஜெயசீலன்(51வயது) வழமை போல கல்முனை தரவைச்சித்தி பிள்ளையார் கோயில் முன்பாக தமது ஆட்டோவை சவாரிக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது மாலை 5.30மணியளவில் இரு முஸ்லிம் நபர் காத்தான்குடி செல்லவிருப்பதாக கூறி 1500ரூபா சவாரிக்காக போக்குவரத்துச்செலவை ஒத்துக்கொண்டு கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணமாகியுள்ளார்கள்.

ஆட்டோ மண்முனையை நெருங்கும் இடைநடுவில் இளநீர் குடிப்பதற்காக இறங்கியுள்ளார்கள்.

அத்தோடு ஆட்டோ சாரதிக்கும் இளநீர் வாங்கிக்கொடுத்துள்ளார்கள்.அந்த இளநீரை பருகிய சாரதிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரை மண்முனை பாலப்பக்கமாக அழைத்துச்சென்றவர்கள் அவரிடமிருந்த ஒன்றரை பவுண் தங்கமாலை ,பணம் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு காத்தான்குடியில் ஆட்டோ உடன் இடையில் மயக்கத்துடன் சாரதியையும் விட்டுத்து தப்பிச்சென்றுள்ளார்கள்.

#அவ்வழியால் சென்றவர்கள் தகவலுக்கமைய காத்தான்குடி போலிசாரால் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் அனுப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து உணர்வற்ற நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

குறித்த சாரதி தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிக்கும் இளநீரில் மயக்கமருந்து கலந்து பணம், தங்க ஆபரணங்கள் கொள்ளையடித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பகிர்வு-ரிசிந்தன் நிசாந்த்

Check Also

இலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை

ஸ்ரீலங்காவில் கணவன் – மனைவியினரில் 15 சதவீதத்துக்கும் அதிகமான தொகையினர் பிள்ளைப்பேறு அற்ற நிலையில் உள்ளனர் என இணங்காணப்பட்டுள்ளது என்று …