Saturday , August 18 2018
Breaking News
Home / Videos / Bigg Boss Tamil Season 2 / தமிழ் என்றாலே நினைவில் நிற்பது கலைஞர் தான்: பிக் பாஸ் போட்டியாளர்கள் உருக்கம்!
தமிழ்

தமிழ் என்றாலே நினைவில் நிற்பது கலைஞர் தான்: பிக் பாஸ் போட்டியாளர்கள் உருக்கம்!

மறைந்த திமுக கலைஞர் கருணாநிதியை பிக் பாஸ் போட்டியாளர்கள் வேதனையுடன் நினைவுக்கூறும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் வெளியுலக தொடர்புகள் ஏதுமின்றி பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. திமுக தலைவரின் மறைவுக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் கலைஞர் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளும் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் என்று சொன்னாலே நமது நினைவிற்கு வருவது கலைஞரின் கருப்புத் கண்ணாடியும், மஞ்சள் துண்டும் தான் என பாலாஜியும், தமிழ் மக்கள் கடலில் தூக்கி வீசினாலும், கட்டுமரமாக வந்து உங்களுக்கு கைக்கொடுப்பேன் என டேனியும், கலைஞரின் புகழை நினைவுக்கூறினர்.

Check Also

பெண்ணை

பெண்ணை ஏமாற்றி உல்லாசம் ; ரூ.10 லட்சம் அபேஸ் : திருமணமான புனே வாலிபர் கைது

சென்னையில் வசித்துவரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் நம்பவைத்து, அவரை அனுபவித்ததோடு, அவரிடமிருந்து பணத்தையும் மோசடி செய்த புனே வாலிபரை …