Friday , October 19 2018
Home / Headlines News / குண்டு வெடிப்பில் இருந்து தப்பினார் வெனிசுலா அதிபர்
வெனிசுலா

குண்டு வெடிப்பில் இருந்து தப்பினார் வெனிசுலா அதிபர்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே நடந்த குண்டு வெடிப்பில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

வெனிசுலா தேசிய படைகளின் 81-வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று நடைபெற்றது. இதில், அந்நாட்டி அதிபர் நிக்கோலஸ் மதுரோ கலந்துகொண்டு உரையாற்றி கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய நிக்கோலஸ் மதுரோ, ஆளில்லாத விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தேன். இந்த குண்டு வெடிப்பிற்கு வலதுசாரி சிந்தனையுள்ள கொலம்பியா நாட்டின் அதிபர்தான் காரணம். தீவிரவாத ஒழிப்பிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதவ வேண்டும் என்றார்.

Check Also

தேமுதிக

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து …