Friday , October 19 2018
Home / Headlines News / திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை: பினராயி விஜயன் அறிவிப்
திருநங்கைகள்

திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை: பினராயி விஜயன் அறிவிப்

திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் எனகேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

சமூகத்தால் இன்று வரை ஒதுக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள். மற்றவர்களின் இழிசொல்லுக்கு தொடர்ந்து ஆளாகி வரும் அவர்கள் படும் இன்னல்கள் வார்த்தைகளால் கூற முடியாதவை. அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்பதையே சிலர் மறந்துவிட்டு அவர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ரூ 2 லட்சம் உதவித்தொகை அறிவிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள கேரள அரசாங்கத்தால் இனி ரூ 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் பெரும் வரவேற்பளித்துள்ளனர்.

Check Also

தேமுதிக

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து …