Saturday , August 18 2018
Breaking News
Home / Headlines News / கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை செலுத்திய ஜெயம் ரவி மகன்கள்: வைரல் புகைப்படம் உள்ளே
கலைஞர் தாத்தாவுக்கு

கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை செலுத்திய ஜெயம் ரவி மகன்கள்: வைரல் புகைப்படம் உள்ளே

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயம் ரவியின் மகன்கள் மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். மேலும், கருணாநிதி இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்வை கோடிக்கணக்கானோர் தொலைக்காட்சியில் பார்த்தனர்.

அந்த வகையில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை நடிகர் ஜெயம் ரவியின் மகன்கள் ஆரவ், அயான் ஆகியோர் டிவியில் பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் கருணாநிதிக்கு சல்யூட் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் ஜெயம் ரவி, அதில் “கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Check Also

பெண்ணை

பெண்ணை ஏமாற்றி உல்லாசம் ; ரூ.10 லட்சம் அபேஸ் : திருமணமான புனே வாலிபர் கைது

சென்னையில் வசித்துவரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் நம்பவைத்து, அவரை அனுபவித்ததோடு, அவரிடமிருந்து பணத்தையும் மோசடி செய்த புனே வாலிபரை …