Tuesday , February 19 2019
Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 2)

முக்கிய செய்திகள்

Headlines News

போர்க் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! – வாசுதேவ திட்டவட்டம்

போர்க்குற்றங்கள் இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணியினர் நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இராணுவ வீரர்களால் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதனை எமது நாட்டுச் சட்டத்தின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளலாம். ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இடம்பெறும்போது தமிழ் …

Read More »

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லை! – ரணிலின் கருத்துக்கு அவரது சகாவே பதிலடி

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமுமே இராணுவம் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஆனால், இராணுவம் போர்க்குற்றங்களை ஒருபோதும் இழைத்ததில்லை.” – இவ்வாறு அடித்துக் கூறியிருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சுஜீவ சேனசிங்க. போர் புரிந்த இரு தரப்பும் குற்றமிழைத்துள்ளார்கள். மாறி மாறிக் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருக்காமல் நடந்தவற்றை மறப்போம், மன்னிப்போம் என ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் கருத்து வெளியிட்டு சில தினங்கள் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 19 பெப்ரவரி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 19-02-2019, மாசி 07, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி இரவு 09.23 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. நவகிரக வழிபாடு நல்லது. மாசி மகம். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை …

Read More »

போர்க்குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!! – மோடியுடனான சந்திப்பின் பின் சந்திரிகா தெரிவிப்பு

“இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை இந்தியா ஆதரிக்கும் என்றே எதிர்பார்க்கின்றேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சந்திரிகா அம்மையார், …

Read More »

காதலித்த குற்றத்துக்காகப் பெற்ற மகளை அடித்துப் படுகொலைசெய்த கொடூர தாய்! – அதிர்ச்சியில் தந்தை தற்கொலை

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரம். அவர் கூலித் தொழிலாளி. அவரின் மனைவி பெயர் நல்லம்மா. தனியார் கல்லூரியில் கல்வி கற்று வரும் இவர்களுடைய ஒரேயொரு மகள் காயத்திரி, தனது வகுப்பு நண்பனான சதீஷை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இதற்கு காயத்திரியின் தாயார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். தனியார் கல்விக்கு மகளைச் செல்லவிடாது வீட்டில் தடுத்துவைத்தார். இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறத் திட்டமிட்ட காயத்திரி, தொலைபேசியில் …

Read More »

கணவரின் பாதுகாப்புப் பற்றி வருந்திய இராணுவ வீரரின் மனைவி தற்கொலை!

குஜராத்தில் தனது கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் இராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பணியாற்றி வரும் இராணுவ வீரர் புபேந்திராசின்ஹ் ஜெத்வா. இவரது மனைவி மீனாட்சி ஜெத்வா (வயது 22). குஜராத்தின் தேவபூமி துவாரகா நகரில் கம்பலியா பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. முன்பு ஒருமுறை பணியில் இருந்தபோது பனிப்புயலில் …

Read More »

உலகில் இரண்டாவது முறையாக ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்!

உலகில் இரண்டாவது முறையாக ஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் நடந்த பிரசவம் பலருக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது. பிரசவத்துக்கு சேர்க்கப்பட்ட 25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண்கள், 1 பெண் என்று 7 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்துக் குழந்தைகளும் நலமாக உள்ளன. பிரசவமான பெண்ணுக்கு ஏற்கனவே …

Read More »

இலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்துகள்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்நிலையில், இந்த வெற்றிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் …

Read More »

நானும் ஒரு தாய்தான்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும்!! – சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு

“நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசின் கடமை.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பல தடவைகள் வடக்குக்குச் சென்றுள்ளேன். அந்த மக்களின் உள்ளக் குமுறல்களை நேரில் பார்த்துள்ளேன். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியைப் …

Read More »

இறுதிப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்! – சந்திரிகாவும் ஏற்றுக்கொண்டார்

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார். “இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள்” என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். சந்திரிகா அம்மையார் மேலும் தெரிவித்ததாவது:- “இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள். ஆனால், போர் நிறைவடைந்த பின்னர் ஒரு தரப்பு மற்றைய …

Read More »