Sunday , February 17 2019
Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 4)

முக்கிய செய்திகள்

Headlines News

இன்றைய ராசிப்பலன் 14 பெப்ரவரி 2019 வியாழக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 14-02-2019, மாசி 02, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 02.54 வரை பின்பு வளர்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் இரவு 10.01 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் …

Read More »

ரணிலின் பாதுகாப்புப் பிரிவினர் கே.கே.எஸ். முகாமுக்குள் செல்லத் தடை! – தொடர்கின்றது மைத்திரியின் பழிவாங்கல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச் சம்பவம் 6 தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு நாளை செல்லவுள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். பலாலி விமானத் தளத்தையும் சென்று பார்வையிடவுள்ளார். பிரதமர் செல்லவுள்ள இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவரது பாதுகாப்புப் பிரிவினரின் …

Read More »

தமிழ் ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா செல்கின்றார் சரா!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கின் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், கனடாத் தூதுவர் டேவிட் மக்கினன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றுக் கொழும்பில் நடைபெற்றுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்துவது, இளையோருக்குச் சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல், மொழிக் கற்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்களிடம் …

Read More »

கிழக்கு ஆளுநரின் சேவைகளுக்கு முன்னாள் முதலமைச்சர் பாராட்டு!

“கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4 ஆயிரத்து 500 பேர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த காலங்களில் குறிப்பிடத்த அளவு சம்பளம் வழங்கப்படாமையைக் கருத்தில் கொண்டு நான் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் 3000 ரூபா வீதம் மாதாந்த சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவும் அவர்களுக்குப் போதாது என்பதை நாம் அறிந்திருந்தபோதும் எதிர்காலங்களில் இதற்கான ஏற்பாடுளை செய்ய வேண்டும் என நினைத்திருந்தோம். இந்நிலையில், இந்த ஆசிரியர்களின் …

Read More »

பிரிட்டன் தலைமையில் ஜெனிவாவில் புதிய தீர்மானம்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த மாதம் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரிட்டன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரிட்டன் தூதரகம் இது குறித்து விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தப் போவதாகவும், சிரியா, தென்சூடான் தொடர்பான தீர்மானங்களையும் முன்வைக்கப் போவதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது. பிரிட்டனுடன் …

Read More »

ஐ.நாவில் இம்முறை இலங்கைக்கு ஆப்பு! – மஹிந்தவும் அடித்துக் கூறுகின்றார்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இம்முறை மேலும் அதிகரிக்கும். அதற்கான வேலைத்திட்டங்களை முத்தரப்பு நாடுகளுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச. இந்தியாவுக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் அங்குள்ள ஊடகவியலாளர்கள் கேட்ட …

Read More »

சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை! – சம்பந்தன் சீற்றம்

“தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள மக்களைச் சமாளிப்பதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்லலாம். மூவின மக்களின் இணக்கத்துடன்தான் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட இருக்கின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். ‘கூட்டாட்சி (சமஷ்டி) தொடர்பில் அன்று பிரச்சினை இருந்தது. இன்று தேர்தல் முறைமை தொடர்பில்தான் பிரச்சினை உள்ளது. தேர்தல் முறைமை இறுதி …

Read More »

புதிய அரசமைப்பு உருவாக்கம் இப்போதைக்கு சாத்தியமில்லை! – கைவிரித்தார் ரணில்

“ஒரு கட்சியை மையப்படுத்திய பலமான அரசு அமைக்கப்படுவதன் மூலமே புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்க முடியும்” என்று தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. “உறுதியான அரசை உருவாக்கும் தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதே நாட்டின் தற்போதைய தேவைப்பாடாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த கூட்டு அரசின் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் …

Read More »

தமிழருக்கு மஹிந்தவை ரொம்பப் பிடிக்குமாம்! – இப்படிக் கூறுகின்றார் நாமல்

“மஹிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார்.” – இப்படிக் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச. மஹிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் எம்.பி., அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “ராஜபக்ச …

Read More »

மட்டக்களப்பில் பாடசாலையில் கஞ்சா வியாபாரம் நடத்திய மாணவன் கைது!

மட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கஞ்சாவுடன் பாடசாலை ஒன்றின் முன்னாள் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் குறித்த மாணவனை அவர்கள் கைதுசெய்துள்ளனர். மாமாங்க பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் இந்த வருடம் டிசம்பர் மாதம் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு …

Read More »