Sunday , February 17 2019
Breaking News
Home / முக்கிய செய்திகள் (page 5)

முக்கிய செய்திகள்

Headlines News

மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை! – இலங்கை உறுதி

“மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு, காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்.” – இவ்வாறு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் சட்டப்பிரிவு பிரதானியான மோனா ரிஷ்மவியிடம் (Mona Rishmawi) உறுதியளித்துள்ளார் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிக்கும், நீதி அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று நீதி அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் …

Read More »

வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வேண்டும்! – ஜனாதிபதி வலியுறுத்து

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாகக் காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் இன்று (12) நண்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விவசாயத்தை பிரதான …

Read More »

சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குச் சென்று கைதான 70 பேரையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குச் சென்ற நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் 70 பேரையும் நாளை (14) விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற படகொன்று காணாமல்போயுள்ளது எனப் படகின் …

Read More »

நீரோடையில் விழுந்து மாணவன் உயிரிழப்பு!

உடபுஸ்ஸவ்வலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருபஹ பகுதியில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். உடபுஸ்ஸவ்வலாவ, ருபஹ பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பசிந்து மதுரங்க எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நீரோடை ஒன்றில் விழுந்திருந்த நிலையில் தந்தையினால் மீட்கப்பட்டு கரைக்கு எடுத்தவரப்பட்டுள்ளார். எனினும், குறித்த மாணவன் ருபஹ வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 13 பெப்ரவரி 2019 புதன்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 13-02-2019, மாசி 01, புதன்கிழமை, அஷ்டமி திதி பகல் 03.46 வரை பின்பு வளர்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 10.27 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் இரவு 10.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் …

Read More »

இனவாதிகளுக்கு ஏற்றாற்போல் உருவாக்கப்படாது அரசமைப்பு! – அடித்துக் கூறுகின்றார் அமைச்சர் ரவி

“இனவாதிகளின் கருத்துக்கு ஏற்றவாறு புதிய அரசமைப்பை உருவாக்க முடியாது” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்க, மேல் மகாண ஆளுநர் அஸாத் ஸாலியை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசமைப்பு ஓர் இனத்துக்காகவோ, ஒரு மதத்துக்காகவோ தயாரிக்கப்படமாட்டாது. தற்போது நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இதனை …

Read More »

கோயில்கள் அமைத்து நிலத்தை பிடிப்பவர்கள் அல்லர் தமிழர்கள்! – அமைச்சர் மனோ அதிரடி

“தமிழர்கள் பிற மதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் கோயில்களை அமைத்து நாட்டையும் நிலத்தையும் பிடிப்பதில்லை.” – இவ்வாறு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மற்றும் சமூகமேம்பாடு, இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் ஒரு அரசியல் விபத்து …

Read More »

மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் காபன் அறிக்கை மேலும் தாமதமடையும்!

அமெரிக்காவுக்குக் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட, மன்னார் மனித எச்சங்கள் தொடர்பாக காபன் அறிக்கையை வழங்க மேலும் சில நாட்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவலை அமெரிக்க நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. மன்னார் சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட 300 மனித எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட 6 மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காகக் கடந்த ஜனவரி 23ஆம் திகதி மன்னாரிலிருந்து …

Read More »

கூட்டமைப்புத் தலைமையில் மாற்றமா? – மாவை, சுமந்திரன் அடியோடு மறுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக எம்.ஏ. சுமந்திரன் எம்.பியைத் தெரிவு செய்வது தொடர்பாகக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் ஆராயப்படுகின்றது எனத் தெரிவித்து கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவனின் பெயரில் வெளியான செய்திகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இந்தத் தகவல்களை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அடியோடு மறுத்தனர் இந்த விடயத்தை ஒட்டிய செய்தி நேற்று முதன்முதலில் ‘த …

Read More »

மதுஷ் குழு சிக்கிய விவகாரம்: திடுக்கிடும் தகவல் அம்பலம்..!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை கைதுசெய்த பின்னர் அவர்களின் இலங்கைத் தொடர்புகளை தேடி விசேட அதிரடிப் படை வலைவிரித்துள்ளது. தலைவர்களே இதில் சிக்கியுள்ளதால் உயிராபத்தை விரும்பாத பலர் சுயவிருப்பின் பேரில் சரணடைய முயன்று வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் சொல்கின்றன. அதேவேளை, டுபாயில் கைப்பற்றப்பட்ட மதுஷ் மற்றும் சகாக்களின் தொலைபேசிகளில் உள்ள விபரங்களை வைத்து …

Read More »