Wednesday , November 14 2018
Home / Headlines News / திருமணம் குறித்து தகவல் தெரிவித்த ராகுல் காந்தி
திருமணம் குறித்து

திருமணம் குறித்து தகவல் தெரிவித்த ராகுல் காந்தி

திருமணம் குறித்து கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள், ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களோடு, ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

அதில், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி, நான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் என தெரிவித்தார்.

மத்தியில் நடைபெறும் ஆட்சி குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2019ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக 230 இடங்களை பிடிப்பது கடினம் என்று பதிலளித்த ராகுல் காந்தி, எனவே, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை என்று கூறினார்.

Check Also

முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு!

வடதமிழீழம் விசுவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 11.11.18 அன்று …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com