Sunday , October 21 2018
Home / Headlines News / கருணாஸை பிடிக்க தனிப்படை அமைப்பு
கருணாஸை

கருணாஸை பிடிக்க தனிப்படை அமைப்பு

காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசிய கருணாஸை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் முதல்வரையும், தி.நகர் துணை கமிஷனர் அரவிந்த்தையும் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசினார். அவரது பேச்சு கடும் கண்டனங்களை எழுப்பியது. அதனையடுத்து அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தலைமறைவாகிவிட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில், தலைமறைவான கருணாஸை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால் நான் தலைமறைவாகவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என கருணாஸ் விளக்கமளித்துள்ளார்.

Check Also

மின்சாரச் செலவைக் குறைக்க செயற்கை நிலவு திட்டம்

தெருவிளக்குகளில் மின்சாரத்தை சேமிக்க செயற்கை நிலவை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். சிச்சுவான் ((Sichuan)) மாகாணத்தில் உள்ள செங்டு …