Monday , October 22 2018
Home / Headlines News / இலங்கையில் மீண்டும் மரணதண்டனை உறுதியாகுமா ?
இலங்கையில்

இலங்கையில் மீண்டும் மரணதண்டனை உறுதியாகுமா ?

சுமார் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்தப்போவதாக இனப்படுகொலையின் முக்கிய மையம் மைத்திரிபால சிறிசேனா கடந்த ஜூலை மாதம் சூளுரைத்திருந்தார்.

சிங்கள அரச தலைவரின் குறித்த அறிவிப்புக்கு எதிராக ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்த நிலையில், இலங்கையில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, மற்றும் ‘‘போதைப் பொருள் விற்றதற்காக தண்டனை பெற்றவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும், எனவே இதனை தடுக்க மரண தண்டனை வழங்குவது அவசியம் என மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு பதில் வழங்கியிருந்ததுடன் மரண தண்டனையை அமுல் படுத்துவதை உறுதி செய்தது சிங்கள அரசு.

இந்நிலையில் நேற்றைய (11.10.2018) தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட்ட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து இவர்களுக்கு மைத்திரி சூளுரைத்ததன் படி மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Check Also

இலங்கையில் 15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை

ஸ்ரீலங்காவில் கணவன் – மனைவியினரில் 15 சதவீதத்துக்கும் அதிகமான தொகையினர் பிள்ளைப்பேறு அற்ற நிலையில் உள்ளனர் என இணங்காணப்பட்டுள்ளது என்று …