Saturday , August 18 2018
Breaking News
Home / Headlines News / ராஜீவ் கொலை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
ராஜீவ்

ராஜீவ் கொலை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதனை எதிர்த்த மத்திய அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனவே, இவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறியே நிலவி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

மேலும், மத்திய அரசின் கூடுதல் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

முன்னதாக, இது தொடர்பான வழக்கு விசாரனயின் போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன்,சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து 3 மாதத்திற்குள் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பெண்ணை

பெண்ணை ஏமாற்றி உல்லாசம் ; ரூ.10 லட்சம் அபேஸ் : திருமணமான புனே வாலிபர் கைது

சென்னையில் வசித்துவரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் நம்பவைத்து, அவரை அனுபவித்ததோடு, அவரிடமிருந்து பணத்தையும் மோசடி செய்த புனே வாலிபரை …