Wednesday , August 15 2018
Breaking News
Home / Headlines News / 3 குழந்தைகளை நீவா நதியில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர தந்தை
3 குழந்தைகளை

3 குழந்தைகளை நீவா நதியில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர தந்தை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர நல்லூர் மண்டலம் பாலகங்கன பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் – அமுதாவிற்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு பிள்ளைகள் இல்லாததால் வெங்கடேஷ் செட்டிபள்ளியை சேர்ந்த அமராவதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அமராவதிக்கும் வெங்கடேஷ்கும் 6 வயது புனீத், 3 வயது சஞ்சய் , 10 மாதம் கொண்ட ராகுல் என்னும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அமராவதிக்கு – வெங்கடேசுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் அமராவதி தனது பிள்ளைகளை அழைத்து கொண்டு தனது தாய்வீடான செட்டிபள்ளிக்கு கடந்த வாரம் சென்றார்.

நேற்றிரவு வெங்கடேஷ் செட்டிபள்ளிக்குச் சென்று அமராவதியை தன்னுடன் வீட்டிற்கு குடும்பம் நடத்த வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடேஷ் தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கங்காதர் நல்லூரிலுள்ள நீவா நதியில் மூன்று பிள்ளைகளையும் தள்ளிவிட்டு கொலை செய்து தலைமறைவானார்.

இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நீவா நதியில் மூன்று சடலங்கள் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் – அமராவதியின் பிள்ளைகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அமராவதி தனது கணவர் வெங்கடேஷ் தன்னிடம் சண்டையிட்டு குழந்தைகளை அழைத்துச் சென்றதாகவும் அவர் வீட்டிற்கு அழைத்து சென்று இருப்பார் என நினைத்தேன்.

ஆனால் தான் பெற்ற குழந்தைகளை அவரே கொலை செய்வார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என கூறி கண்ணீர் விட்டு கதறினார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேஷ் தேடி வருகின்றனர்

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் – 15 ஆகஸ்ட் – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 15-08-2018, ஆடி 30, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 01.52 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்தம் …