Breaking News
Home / Headlines News / 70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்

70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்

தான் கடந்த 70 ஆண்­டு­க­ளாக எந்­த­வி­த­மான தண்ணீர், உண­வின்றி வாழ்ந்து வரு­வ­தாக இந்­திய குஜராத் மாநி­லத்தைச் சேர்ந்த 88 வயது சாமியார் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இவரின் உடல்­நி­லையைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்கள் மிகப்­பெ­ரிய அதி­சயம் என்று வியக்­கின்­றனர்.

குஜராத் மாநிலம் மேக்­சனா மாவட்டம், சாரோட் கிரா­மத்தில் வசித்து வரும் 88 வய­தான பிர­கலாத் ஜனி என்­பவர், உண­வுக்குப் பதி­லாக நாள் முழு­வதும் தியா­னத்­தி­லி­ருந்து காற்றை மட்­டுமே குடித்து வாழ்ந்து வரு­கின்றார்.

இதனால், உலக அள­வி­லுள்ள இவரின் சீடர்கள் ‘சுவாச ஞானி’ என்று அழைக்­கின்­றனர்.

இவர் உயிர் வாழும் அதி­சயம் குறித்து ஆய்வு செய்ய இது­வரை பல்­வேறு மருத்­து­வர்கள் மற்றும் மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் ஆகியோர் இந்தச் சாமி­யாரை ஆய்வு செய்­துள்ளனர்.

இவரை ஆய்வு செய்த மருத்­து­வர்கள், எந்த அடிப்­ப­டையில் இவர் உயிர்­வாழ்ந்து வரு­கிறார், உடல் உறுப்­புகள் எப்­படி இயங்­கு­கின்­றன என்­பது புரி­யாமல், குழம்­பி­யுள்­ளனர். ஆனால், ஏதோ மிகப்­பெ­ரிய அதி­சயம் ஒன்றால் மட்டும் பிர­கலாத் சாமியார் வாழ்­வதை ஒப்­புக்­கொள்­கின்­றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு மத்­திய பாது­காப்புத் துறையின் மருத்­துவம் மற்றும் அறி­வியல் துறை, மத்­திய பாது­காப்பு ஆய்வு மற்றும் மேம்­பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆகி­ய­வற்றில் இருந்து சாமியார் பிர­க­லாத்தை ஆய்வு செய்­தனர்.

அவரை 15 நாட்கள் கண்­கா­ணிப்பில் வைத்­தனர். அவரைச் சுற்றி கெம­ராக்கள் பொருத்திக் கண்­கா­ணித்­தனர்.

பிர­கலாத் சாமி­யா­ருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, ரேடி­யா­லஜி, பயோ­கெ­மிக்கல் உள்­ளிட்ட பல்­வேறு மருத்­துவப் பரி­சோ­த­னைகள் செய்­யப்­பட்­டன.

ஆனால், ஆய்வின் முடிவில், சாமியார் பிர­கலாத், தனது உடலில் மிகவும் உச்­ச­கட்­ட­மாக பசியைத் தாங்கும் சக்­தியும், தண்ணீர் தாகத்தை தாங்கும் சக்தியும், ேஹா­ர்மோன்­களை கட்­டுப்­ப­டுத்­துதல், சக்­தியை மிச்­சப்­ப­டுத்­துதல் போன்­ற­வற்றை அபா­ர­மாகச் செய்து வரு­கிறார் என்று அறிக்கை அளித்­து­விட்டுச் சென்­றுள்­ளனர்.

பிர­தமர் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சாமியார் பிரகலாத்தை சந்தித்து ஆசி பெற்றமையும் சிறப்பம்சமாகும்.

Check Also

15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்..

செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக …

error: Content is protected !!