Friday , October 19 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி அக்காவின் அட்வைஸ் தான் ஹைலைட்!
பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி அக்காவின் அட்வைஸ் தான் ஹைலைட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வைஷ்ணவி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 43 நாட்களை கடந்துள்ள நிலையில், சர்வாதிகார டாஸ்க் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீடே சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா கையில் சிக்கி சின்னாப்பின்னமாகி இருக்கிறது. இந்நிலையில், வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

வைஷ்ணவியின் வருகை இன்றைய நிகழ்ச்சியில் ஹைலைட்டான பல விஷயங்கள் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள பிக் பாஸ் புரொமோவில், பிக் பாஸ் வீட்டிற்குள் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள வைஷ்ணவி, இந்த வீட்டில் எப்படி பேச வேண்டும் என்று, ’கேவலமா தரமட்டமா டேமேஜ் பண்ணிக்கிறீங்க’ என மகத், யாஷிகாவுக்கு பாடம் எடுக்கிறார்.

என்ன பாடம் எடுத்து என்னபிரயோஜனம், மகத்துக்கு வான் முட்டும் அளவிற்கு கோபம் வந்துவிடுகிறது என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Check Also

தேமுதிக

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு…

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து …