Home / இலங்கை செய்திகள் / இழுத்து மூடப்பட்ட சு.க. தலைமையகம் மீண்டும் திறப்பு!

இழுத்து மூடப்பட்ட சு.க. தலைமையகம் மீண்டும் திறப்பு!

Spread the love

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின்பேரில் இழுத்து மூடப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை (01) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவரான மஹிந்த அமரவீர எம்.பி. உறுதிப்படுத்தினார்.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சி தலைமையகம் கடந்த 26 ஆம் திகதி மூடப்பட்டதுடன், சாவிக்கொத்து மருதானை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் அரசியல் களத்தில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர,

“தாம் தாய்லாந்தில் இருந்து திரும்பும் வரை, கட்சித் தலைமையகத்தை மூடுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி தற்போது நாடு திரும்பிவிட்டார். எனவே, கட்சித் தலைமையகம் நாளை திறக்கப்படும்.

அதேவேளை, மருதானை பொலிஸ் நிலையத்தில் கடந்த 26ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்த சுதந்திரக் கட்சி தலைமையகத்தின் சாவிகள் மறுநாள் பிற்பகல் 3.15 மணியளவில், சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்டன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Check Also

மீண்டும் இலங்கையில் பதற்றநிலை

மீண்டும் இலங்கையில் பதற்றநிலை: மசூதிகள் மீது தக்குதல்

Spread the loveஇலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். ஏப்ரல் 21 …