Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த பலத்த மழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

Check Also

நான் அதிகராத்திற்கு வந்தால் ராஜபக்ஷே கதை கந்தல்..!! அடித்து கூறும் பிரிட்டீஸ் எதிர்கட்சித் தலைவர்..!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!5Shares தான் அதிகாரத்துக்கு வந்தால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சுயாட்சி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என …