தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியில் 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது .
தமிழகத்தில்
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் 8 செ.மீட்டர் மழையும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் சேலம் சங்கரி துர்கா, தேனி மாவட்டம் பெரியகுளம், நீலகிரி நடுவட்டம் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5 செ.மீட்டர் பதிவாகியுள்ளது

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது அதிகபட்சமாக வெப்பநிலையை 34
டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும்

கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் பதில்

Tags
Show More

Related Articles

Back to top button
Close