தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் ஜோரான மழை பெய்தது. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 12 முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களின் கூறியதாவது : வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்யக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில், தென்மேற்று பருவமழை காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறினார். மேலும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள காரணத்தினால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close