Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில்

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 6
    Shares

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் தமிழக கடலோரத்தை ஒட்டிய வளிமண்டலத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக, கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 6
    Shares

Check Also

கடலூரில்

கடலூரில் கூவிக்கூவி பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!6Shares கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது மீண்டும் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. …