மரு‌த்துவ‌ குறிப்புகள்முக்கிய செய்திகள்

மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் கை மருந்து

மூல நோயால் அவதிப்படுபவர்கள், எருக்கம் இலையில் ஆமணக்கு எண்ணெய்யைத்தடவி, தணலில் வாட்டி ஆசன வாயில் வைத்துக் கட்டிக்கொண்டால், விரைவில் குணம் பெறலாம்.

வில்வம், கஸ்துாரி மஞ்சள், கொத்தமல்லி, ஓமம், கல்உப்பு ஆகியவற்றைப் பொடியாக்கி, தினமும் 5 கிராம் எடுத்து ஒரு ஸ்பூன் நெய்யுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்.

சிறுநாகப்பூ, ஏலக்காய், சுக்கு, திப்பிலி, இலவங்கம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடியாக்கி, ஒருநாளில் ஏதாவது ஒரு வேளை பனங்கற்கண்டுடன் கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

தர்ப்பை வேர் மற்றும் சிற்றாமுட்டி வேர் இரண்டையும் அரிசி கழுவிய நீர் சேர்த்து நன்றாக அரைத்து மிளகு அளவு சாப்பிட்டு வந்தால் மூல நோயால் ஏற்படும் ரத்தப்போக்கு நிற்கும்.

துத்திக் கீரையை ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி, ஆறிய பிறகு ஆசன வாயில் வைத்துக் கட்டி மறுநாள் அகற்றிவிட்டால், இரண்டே நாளில் மூல நோய் குணமாகும்.

துத்திக் கீரைச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பசும்பாலில் கலந்து குடித்தால் மூல நோய் குணமாகும்.

காட்டாமணக்கு இலையை நன்றாக அரைத்து ஆசன வாயில் தடவினால், சில நாள்களிலேயே உள் மூலம் குணமாகும்.

காட்டுத் துளசியின் விதைகளைக் காயவைத்துப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் உள் மூலம் முழுமையாகக் குணமாகும்.

அமுக்கிரா கிழங்கைப் பசும்பாலில் வேகவைத்து எடுத்து, வெய்யிலில் காயவைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டால் மூல நோய் சரியாகும்.

அதிமதுரத்தைப் பொடி செய்து, மாதுளம் பழச் சாறில் (ஒரு அவுன்ஸ்) 5 கிராம் பொடியைக் கலந்து சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு போன்றவை குணமாகும்.

ரோஜாப்பூவில் தயாரிக்கப்பட்ட சர்பத்தை அடிக்கடி குடித்துவந்தால் மூலச்சூடு குறைந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம் பழத்தோலை ஊற வைத்த தண்ணீரால், மழை கழித்த பிறகு ஆசன வாயைக் கழுவினால், மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாவதுடன், ரத்தப்போக்கும் நிற்கும்.

மணத்தக்காளிக் கீரையையும், வெங்காய்த்தையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் மூலச் சூடு குறையும்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close