இங்கே

இங்கே

———–
எங்கட ஊருக்கு
திரும்பினோம்
யுத்தத்தில் தப்பி பிழைத்தவர்
மட்டும்

கண்மூடிக்கிடக்கிறது
வயல்வெளி
குண்டடிபட்டு கிடக்கிறது
பலாமரம்

படித்த பள்ளியும்
கும்பிட்ட கோவிலும்
இடிந்து

கூவையும்
கோட்டானும் தான்
எஞ்சி வாழ்கின்றனவோ

எங்கோ சத்தமிட்டு
கேட்கின்றது

சொத்திநாய் ஒன்று
தெருவில் கிடந்து
ஊளையிடுகின்றது
ஒரு இறுதி ஊர்வலம் போகிறது
விரல் விட்டு
எண்ணத்தக்க அளவினருடன்
வாழ்க்கையில் அர்த்தம்
தொலைஞ்சு போச்சு

வீசுகின்ற காற்றுக்கும்
விடும் மூச்சிற்க்கும் இடையே
பெரிய இடைவெளி
இங்கே…

ஆ.முல்லைதிவ்யன்

Check Also

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர் கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவில் சிக்கித் தவித்த 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு …